History PDF Print E-mail
Written by Administrator   
Thursday, 16 May 2013 04:05

 

பாடசாலையின் வரலாறு


திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா வலயத்தில் முள்ளிப்பொத்தானைக் கோட்டத்தில் 01.01.1992ம் ஆண்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு முளைத்த ஒரேஒரு மகளிர் பாடசாலை தி – கிண் – பாத்திமா பாலிகா மகா வித்தியாலயமாகும். இப்பாடசாலையானது 12000 மக்கள் தொகையைக் கொண்ட தம்பலகாமப் பிரதேசத்தில் அமையப்பெற்ற 15 தமிழ்மொழிப் பாடசாலைகளுள் 1C தரத்திலான ஒரேஒரு பெண்கள் தமிழ்மொழிப் பாடசாலையாக உயர்ந்து நிற்பது பெருமைக்குறியதாகும்.

பிரதேசவாசிகள், அரசியல்வாதிகள், கல்விமான்களின் முள்ளிப்பொத்தானைப் பிரதேசத்திற்கான பெண்கள் பாடசாலையின் முக்கியத்துவம் என்ற சிந்தனையில் முளைவிட்டதே இந்தப்பாடசாலையாகும்

தற்காலிகக் கொட்டில்களுடன் மாணவிகளைக் கொண்டு ஆரம்பப்பிரிவுடன் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஏறத்தாள 500 மாணவிகளுடன் உயர்தரப் பிரிவுடன் இயங்குவது அதன் மனித வள விருத்திக்கான சான்றிதழாகும்.

எனினும் சமகாலத்தில் ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பு நோக்குகையில் பௌதீக வளமின்றி இயங்கிவரும் பாடசாலை இதுவன்றே என்று கூற வேண்டும் 18 வவகுப்பறைகளுள் 08 வகு்பபறைகள் மாத்திரமே நிரந்தர கட்டிடத்தினுள் கற்றல் கற்பித்தலி்ல் பங்பேற்க ஏனைய வகுப்புக்கள் கூடாரங்களிலும் மர நிழல்களிலும் இருப்பது பரிதாபத்திற்குறிய நிலைப்பாடாகும் மேலும் இப்பாடசாலை வேண்டி நிற்கும் பௌதீக வளங்கள பல அவற்றுள் நிரந்தர வகுப்பறை கட்டடம் விஞ்ஞான ஆய்வுகூடம் ஆங்கில வள நிலையம் அதிபர் காரியாலயம் ஆசிரியர் ஓய்வறை சிற்றுண்டிசாலை மைதானம் என அடிக்கிக்கொண்டே போகலாம்.

வகுப்பறை இன்மையால் மாணவர்கள் காற்று, வெயில், மழைக்காலங்களில் படும் அவஸ்தைகள் சொல்லென்னா இத்தனைக்கும் இப்பாடசாலை ஒர் பிள்ளைநேயப் பாடசாலையாகும்

 

 

 

Last Updated on Sunday, 19 May 2013 04:38
 


Powered by Joomla!. Designed by: css joomla templates ThemZa  Valid XHTML and CSS.